செல்லிடப்பேசி சேவைக்கான இணைப்பு கட்டணம் குறைப்பு
செல்லிடப்பேசி அழைப்புக்கான இணைப்புப் கட்டணத்தை 14 பைசாவில் இருந்து 6 பைசாவாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) குறைத்துள்ளது. 2020-ஆம் ஆண்டில் இருந்து இந்த கட்டணமும் இருக்காது என்றும் டிராய் கூறியுள்ளது.
செல்லிடப் பேசி சேவையில் புதிதாக நுழைந்துள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு டிராயின் இந்த நடவடிக்கை அதிக பயனளிக்கும்.
செல்லிடப்பேசி சேவை அளிக்கும் ஒரு நிறுவனம், பிற நிறுவனங்களிடம் இருந்து தனது வாடிக்கையாளருக்கு வரும் அழைப்பை இணைக்க 14 பைசாவை எதிர் நிறுவனத்திடம் இருந்து கட்டணமாக பெற்று வந்தது.
இப்போது இந்த கட்டணம் 6 பைசாவாக குறைந்துவிட்டது.
அண்மைக் காலமாக ரிலையன்ஸ் ஜியோ சேவையை பெரும்பாலானோர் பயன்படுத்தத் தொடங்கிவிட்ட நிலையில், இனி அந்த நிறுவனம் போட்டி நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டிய தொகை பெருமளவில் குறையும்.