ரயில் பயணிகள் இனி ‘எம்-ஆதார்’ காண்பித்தால் போதுமானது: இந்திய ரயில்வேத்துறை அறிவிப்பு
ரயில் பயணத்துக்கு இனி எம்- ஆதார் போதுமானது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்திய ரயில்களில் இருக்கைகளை முன்பதிவு செய்து பயணம் செய்வதற்கு, ஒரிஜினல் ஆதார் அல்லது அடையாள அட்டை காண்பிக்க வேண்டியது அவசியம். பயணிகளிடம் ஒரிஜினல் அடையாள அட்டை இல்லாத பட்சத்தில் அபராதம் விதிப்பது வழக்கம்.
இனி பயணிகளுக்கு இந்த கவலை இல்லை. ரயில் பயணங்களுக்கு ‘எம்-ஆதார்’ காண்பித்தால் போதுமானது என இந்திய ரயில்வேத்துறை அறிவித்துள்ளது.
‘எம்-ஆதார்’ என்பது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொபைல் செயலியாகும். இதை ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் கொண்ட ஸ்மார்ட் போனில் டவுண்டோல்ட் செய்து கொள்ள வேண்டும்.
அதில் ஆதார் கார்டை டவுண்லோடு செய்து டி.டி.ஆரிடம்., காண்பித்தால் போதும் என ரயில்வேத்துறை அறிவித்துள்ளது.