முகத்தை அடையாளம் கண்டுகொள்ளும் வசதியுடன் ஐபோன்-8, 8 பிளஸ் மாடல் வெளியீடு
உலகமே எதிர்பார்த்துக்காத்திருக்கும் ஐ-போன் - 8 மிகவும் பிரம்மாண்ட முறையில் வெளியாகவுள்ளதாக அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.இதன் ஃபஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
உலகின் புகழ்பெற்ற நிறுவனமான அப்பிள் நிறுவனம் ஆண்டு தோறும் ஒவ்வொரு செப்டம்பர் மாதங்களில் தனது புதிய தயாரிப்புகளை வெளியிட்டு வருகிறது.
உதாரணமாக, ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் தயாரிப்புக்கு பிறகு கடந்த ஆண்டு ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் ஆகிய இரண்டு ஐபோன் வெளியானது எனினும் இதில் போதுமான மாற்றங்கள் இல்லை,
எனவே இந்த ஆண்டு பல மாற்றங்களுடன் புதிய மாடல் ஐ-போனை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதனடிப்படையில் புதிய ஐபோன்கள் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ்-ல் முக்கியமான அம்சங்களைக் காண்கிறோம். இந்த போன்களில் முகத்தை அடையாளம் கண்டுகொள்ளும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் 4கே தொழிற்நுட்பத்தின் கூடிய டி.வி, எல்.டி.இ. வசதியுடன் கூடிய வாட்ச், உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியாகவிருக்கின்றன. கவர்ச்சிகரமான வண்ணங்களுடன் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஆகியவை முறையே 4.7-அங்குல மற்றும் 5.5 அங்குல அளவுகள் உள்ளது