உள்ளேன் ஐயா க்கு பதில் இனி, ஜெய்ஹிந்த்
மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., அரசு உள்ளது. இங்கு பள்ளிகளில், மாணவர் வருகையை பதிவேட்டில் குறிக்கும் போது, மாணவர்கள், 'உள்ளேன் ஐயா' என, கூறுவது வழக்கம். இனி, உள்ளேன் ஐயாவுக்கு பதிலாக, 'ஜெய்ஹிந்த்' என, கூறுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.வரும், நவ., 1 முதல், இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. அதற்கு முன், சத்னா மாவட்டத்தில், அக். 1 முதல் இது சோதனை முறையில் செயல்படுத்தப்பட உள்ளது.''ஜெய்ஹிந்த் என்று கூறுவதன் மூலம், மாணவர்கள் இடையே தேசப்பற்றை ஏற்படுத்தலாம். இது அனைத்து மதத்தினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வார்த்தை,'' என, ம.பி., பள்ளிக்கல்வி அமைச்சர் விஜய் ஜா தெரிவித்தார்.அதே நேரத்தில், அரசின் இந்த முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, விமர்சித்து வருகின்றன.