உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட, 1,013 உதவி மருத்துவர்களுக்கு, பணி நியமன ஆணைகளை, முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், முதல்வர் பழனிசாமி பேசியதாவது: தமிழக சுகாதாரத் துறை, சிறந்த சேவை செய்து வருகிறது. இந்தியாவில் மருத்துவத் துறையில், தமிழகம் முதன்மை வகிக்கிற அளவுக்கு, சிறப்பான மருத்துவர்கள், இங்கு உள்ளனர்.புதிதாக பணியில் சேரும் மருத்துவர்கள், கிராமப்புற ஏழைகளுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து, மக்கள் போற்றுகிற அளவிற்கு பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், சுகாதார அமைச்சர், விஜயபாஸ்கர், தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.