நீட் போராட்டம் : ரூ.5,000 அபராதம்
'நீட்' நுழைவு தேர்வுக்கு எதிராக, மாணவர்களை வலுக்கட்டாயமாக போராடச் செய்து, கலவரத்தை துாண்டும் விதமாக செயல்பட்ட, மாணவ - மாணவியருக்கு, ௫,௦௦௦ ரூபாய் அபராதம் விதிக்க, போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: 'நீட்' தேர்வுக்கு எதிராக, மாணவர்களை வலுக்கட்டாயமாக போராடச் செய்து, கலவரத்தை துாண்டிய, மாணவ - மாணவியருக்கு, சம்மன் அனுப்பி உள்ளோம். நேரில் ஆஜராக தவறினால், தலா, ரூ.5,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
ஆறு மாதத்திற்கான நன்னடத்தை பத்திரமும் தாக்கல் செய்ய வேண்டும்; அதில், இரண்டு பேர் ஜாமின் கையெழுத்து போட வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.