மருத்துவமனை ஊழியர்கள் போராடினால் நடவடிக்கை
'மருத்துவமனை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், நடவடிக்கை எடுக்கப்படும்' என, சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' காலவரையற்ற போராட்டத்தை நடத்தி வருகிறது. உயர் நீதிமன்ற தடை, அரசு எச்சரிக்கையையும் மீறி, போராட்டம் நடக்கிறது.
இதில், சுகாதாரத் துறை ஊழியர்கள் பங்கேற்கவும், அவசர கால விடுப்பு தவிர, விடுமுறை எடுக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, மருத்துவக் கல்வி இயக்குனர், எட்வின் ஜோ கூறுகையில், ''ஊழியர்களுக்கு அவசரகால விடுப்பு தவிர, பிற விடுப்புகள் வழங்கப்படாது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் குறித்த தகவல், தமிழக அரசுக்கு அனுப்பப்படுகிறது. அவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.