வருவாய்த்துறை பெயர் மாற்றம்
வருவாய்த்துறை அமைச்சர், இனிமேல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் என, அழைக்கப்படுவார்.
தமிழகத்தில், வருவாய்த் துறையில், பேரிடர் மேலாண்மை துறை ஒரு பிரிவாக இருந்தது. இந்தாண்டு பிப்ரவரியில், இரு பிரிவுகளும் இணைக்கப்பட்டு, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, வருவாய்த்துறை அமைச்சர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை, தமிழக அரசின் தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்து உள்ளார்.
நேற்று, தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில், வருவாய்த்துறை அமைச்சர், உதயகுமார் பெயருக்கு கீழே, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை என, பெயர் மாற்றப்பட்டு உள்ளது.