போராட்டத்தை தொடர ஜாக்டோ - ஜியோ முடிவு
காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்துவது என, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பு முடிவு செய்துள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோவின், ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம், சென்னையில், நேற்று நடந்தது.
இதில், தொடர் வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியான, காத்திருப்பு போராட்டத்தை, தொடர்ந்து மேற்கொள்வது என, முடிவு செய்யப்பட்டது.
மேலும், மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவை ஏற்று, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் நேரில் ஆஜராகி, வழக்கை சட்டப்படி எதிர்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.