முதுநிலை சட்ட படிப்பு: 15ம் தேதி கவுன்சிலிங்
அரசு சட்ட கல்லுாரிகளில், முதுநிலை சட்ட படிப்புக்கான கவுன்சிலிங், வரும், ௧௫ம் தேதி நடக்கும்' என, சட்டக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
சட்டக்கல்வி இயக்குனர், என்.எஸ்.சந்தோஷ் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சட்டக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு ஆகிய அரசு சட்ட கல்லுாரிகளில், எல்.எல்.எம்., என்ற, முதுநிலை சட்ட படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. இதற்கான கவுன்சிலிங், செப்., 15, காலை, 9மணிக்கு, சென்னையிலுள்ள, அம்பேத்கர் சட்ட கல்லுாரி வளாகத்தில் நடக்கும்.
இதற்கான தரவரிசை பட்டியல், 'கட் ஆப்' மதிப்பெண் விபரம், www.tndls.ac.in மற்றும் அரசு சட்டக்கல்லுாரி இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்ணுக்குள் அடங்கிய மாணவர்கள், உரிய சான்றிதழ்களுடன் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.