நீட் வினா - விடை புத்தகம் வெளியீடு தள்ளி வைப்பு
'நீட்' தேர்வு, வினா - விடை புத்தகம் வெளியிடுவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அரியலுார் மாணவி அனிதா தற்கொலையை அடுத்து, 'நீட்' தேர்வுக்கு எதிராக, பல்வேறு கட்சிகள், அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. பல இடங்களில் மாணவர்களும் போராடி வருவதால், தலைமை ஆசிரியர்களும், போலீசாரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், 'நீட்' தேர்வுக்கான, 59 ஆயிரம் மாதிரி வினா, விடைகள் அடங்கிய, தொகுப்பு புத்தகம் வெளியிடுவது நிறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், அதை வெளியிட்டால், தமிழக அரசு, 'நீட்' தேர்வை ஏற்றதாக, மாணவர்களின் போராட்டம் திசை மாறும் என, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதனால், போராட்டம் முடிவுக்கு வரும் வரை, 'நீட்' புத்தக வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.