அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் இன்று இயங்கும் தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தில் போக்குவரத்துத் துறையில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்கள் இன்று (சனிக்கிழமை) வேலை நாளாக இயங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் ஓட்டுநர் பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் நகல் ஓட்டுநர் உரிமம் வழங்குதல் ஆகிய பணிகள் மட்டும் மேற்கொள்ளப்படும்.
இப்பணிகள் தொடர்பான சேவைகளைப் பெற விரும்புவோர் சம்மந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.