‘நீட்’ தேர்வுக்கு எதிராக போராடிய கல்லூரி மாணவர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு
‘நீட் தேர்வுக்கு எதிராக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
‘நீட் தேர்வுக்கு எதிராக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள் சிலரும் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீட் தேர்வுக்கு எதிராக அமைதியான வழியில் மட்டுமே சுப்ரீம் கோர்ட்டு போராட்டம் அனுமதி உள்ளது. எனவே சட்டம்–ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் நடந்துக் கொண்டதாக கோயம்பேட்டை சேர்ந்த விக்னேஷ்(வயது 20), பெரம்பூரை சேர்ந்த மாணிக்கம்(20), அருண்(30) ஆகிய 3 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் 3 பேரும் கல்லூரி மாணவர்கள் ஆவார்கள்.