ஆதாரை மொபைல் எண்ணுடன் இணைக்காவிட்டால் சிம் கார்டு செயலிழப்பு செய்யப்படும் - மத்திய அரசு அறிவிப்பு
2018 பிப்.க்குள், ஆதாரை மொபைல் எண்ணுடன் இணைக்காவிட்டால் சிம் கார்டு செயலிழப்பு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆதார் அட்டைகள் பெறுவது குறித்து தொடர் விழிப்பு உணர்வுகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. சத்துணவு பெற, ஓட்டுநர் உரிமம் பெற என ஆதார் பல்வேறு விஷயங்களுக்கு அவசியம் என அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைக்காத சிம்கார்டுகள் வரும் 2018-ம் ஆண்டு பிப்ரவரிக்குள் செயலிழப்பு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 2017-ம் ஆண்டு பிப்ரவரியில் உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலின் படி சிம்கார்டுகள் செயலிழப்பு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.