உள்ளாட்சி தேர்தல் பணி சுறுசுறு
தமிழகத்தில், 2016ல் நடக்கவிருந்த உள்ளாட்சி தேர்தல், உயர் நீதிமன்ற தடையால் நிறுத்தப்பட்டது. இது தொடர்பான வழக்குகள், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. சமீபத்தில், உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், 'நவ., 17ல், உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். இதற்கான தேர்தல் அறிவிப்பை, வரும், 18ல் வெளியிட வேண்டும்' என உத்தரவிடப்பட்டுள்ளது.இதையடுத்து, மாவட்ட கலெக்டர்களுடன், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, ஓரிரு நாட்களில் ஆலோசிக்க, மாநில தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. அதேநேரத்தில், குறைந்த கால அவகாசமே இருப்பதால், தேர்தலை நடத்த முடியாத நிலையில், தேர்தல் கமிஷன் உள்ளது. தேர்தலை தள்ளிப் போடுவதற்கான காரணங்களை கண்டறிய, இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்படுவதாக, தேர்தல் கமிஷன் வட்டாரம் தெரிவித்தது.