மாற்றுத் திறனாளிகள் தேசிய மாநாடு செப்.16 ல் விருதுநகரில் துவக்கம்
ஊனமுற்றோர் உரிமைகளுக்கான 'தேசிய மேடையின் இந்திய மாநாடு' செப்டம்பர் 16 மற்றும் 17 ல் விருதுநகரில் நடக்க உள்ளது.தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின்அகில இந்திய அமைப்பு 'ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை'. இந்த அமைப்பின் தேசிய மாநாடு செப்., 16ல் விருதுநகரில் துவங்குகிறது. இரண்டு நாள் மாநாட்டை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால கவுடா துவக்கி வைக்கிறார்.சங்க தேசிய தலைவர் ஜான்சிராணி கூறியதாவது: உலகத்தின் மொத்த மாற்றுத் திறனாளிகளில் 15 சதவீதம் பேர் நம்நாட்டில் உள்ளனர். இதன்படி 20 கோடி பேர் இருப்பர். இதற்கான கணக்கெடுப்பை மத்திய அரசு எடுக்கவில்லை. பல்நோக்கு அடையாள சான்றிதழ் கிடைக்கவில்லை. செயற்கை கை, கால், காதொலி கருவிகளுக்கு ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்டுள்ளது. இவை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும்.
செப்., 17ல் எம்.ஜி.ஆர். சிலையில் இருந்து ஊர்வலம் நடக்கும். மூளிப்பட்டி அரண்மனையில் மாநாடு நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா காரத் பேசுகின்றனர்.
இவ்வாறு கூறினார்.