மாணவர் போராட்டத்தால் போலீசாருக்கு விடுமுறை இல்லை
தமிழகத்தில், மாணவர் போராட்டம் வலுத்து வருவதால், தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மட்டுமே, போலீசாருக்கு விடுமுறை தர வேண்டும் என, எஸ்.பி.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: நீட்' தேர்வுக்கு எதிராக மாணவர் போராட்டம் வலுத்து வருவதால், மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. காவல் துறையில் பணியாளர் பற்றாக்குறை இருப்பதால், இந்த பிரச்னை முடிவுக்கு வரும் வரை, தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால் மட்டுமே, போலீசாருக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என, எஸ்.பி.,க்கள் மற்றும் கமிஷனர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.