பிளஸ் 1 காலாண்டு தேர்வு புதிய விதிப்படி வினாத்தாள்
காலாண்டு தேர்வு, வரும், 11ல் துவங்கும் நிலையில், பிளஸ் 1க்கு புதிய வினாத்தாள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தமிழகம் முழுவதும், அனைத்து வகுப்புகளுக்கும், 11ம் தேதி, காலாண்டு தேர்வு துவங்கி, 23 வரை நடக்கிறது. பின், ஒரு வாரம், விடுமுறை விடப்படும்.
இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கு, பொதுத் தேர்வு நடத்தப் பட உள்ளது. இதற்கென, பாடவாரியான மதிப்பெண், 200லிருந்து, 100க்கு மாற்றப்பட்டு, புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையிலேயே, வினாத்தாள் தயாரிக்கப்படும்.
அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வுக்கு பயிற்சி செய்யும் வகையில், காலாண்டு தேர்வுக்கான வினாத்தாள் மாடல் இருக்கும் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.