சென்னை பல்கலை தேர்வு ரிசல்ட் இன்று வெளியீடு
தொலைநிலை கல்வியில், முதுநிலை படிப்புக்கான தேர்வு முடிவு, இன்று(செப்.,7) வெளியாகிறது. சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., மற்றும் எம்.எஸ்சி., படிப்புகளுக்கான தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது. தேர்வு முடிவை, www.ideunom.ac.in இணையதளத்தில், இரவு, 8:00 மணிக்கு மேல் தெரிந்து கொள்ளலாம். மறுமதிப்பீடுக்கு, செப்., 9 முதல், 18 வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.