சி.பி.எஸ்.இ., புதிய தலைவராக அனிதா கர்வால் நியமனம்
சி.பி.எஸ்.இ., புதிய தலைவராக, அனிதா கர்வால் நியமிக்கப்பட்டு உள்ளார். நிதி சேவை துறை செயலராக, மூத்த, ஐ.ஏ.ஏஸ்., அதிகாரி, ராஜிவ் குமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், 17 பேர், நேற்று முன்தினம், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் செயலர்களாகவும், கூடுதல் செயலர்களாகவும் நியமிக்கப்பட்டனர். ஜார்க்கண்டைச் சேர்ந்த, மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரியான, ராஜிவ் குமார், மத்திய நிதி சேவை துறை செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
குஜராத்தைச் சேர்ந்த மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரியான, அனிதா கர்வால், சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்; இவர், இதற்கு முன், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கூடுதல் செயலராக பணியாற்றினார்.
சி.பி.எஸ்.இ., தலைவராக இருந்த ராஜேஷ்குமார் சதுர்வேதி, தேசிய திறன் மேம்பாட்டு அமைப்பின், டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டு உள்ளார்.