ஏ.டி.எம்.களில் ரூ200 நோட்டுக்கள் வர 3 மாதங்களாகும்
புதிய 200 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் வழியாக வினியோகம் செய்ய 3 மாதங்களாவது ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. குறைந்த அளவிலான நோட்டுகளே புழக்கத்திற்கு வந்துள்ளன. இந்நிலையில், 200 ரூபாய் நோட்டுகளை வழங்கும் வகையில் ஏடிஎம் இயந்திரங்களை மறுசீரமைக்க பெரும்பாலான வங்கிகளில் இருந்து, இதுவரை எந்த உத்தரவும் வரவில்லை என்று ஏடிஎம் பராமரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஏடிஎம் இயந்திரங்களை 200 ரூபாய் நோட்டுகளை கொடுக்கும் வகையில் மாற்றிமைக்கும் பணிகளை தயார்படுத்தி வைக்குமாறு சில வங்கிகள் மட்டுமே கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால், 200 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்மில் கிடைக்க தாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது.