POLYTECHNIC விரிவுரையாளர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு HALLTICKET DOWNLOAD செய்து கொள்ளலாம்
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட பத்திரிக்கைச் செய்தி :
ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வினை எதிர்வரும் 16.09.2017 அன்று நடத்த உள்ளது. இத்தேர்வு எழுத 1,70,363 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு (Hall ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 01.09.2017 முதல் தேர்வர்கள் அவர்களது விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து, தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் கடைசி நேர பதற்றத்தை தவிர்க்கும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேர்வர்கள் தேர்விற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுருத்தப்படுகிறார்கள்.