திருவாரூர் மாவட்டத்தில் 90 நீர்மூழ்கி தடுப்பணை அமைக்க திட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த 90 இடங்களில் நீர்மூழ்கி தடுப்பணைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.
திருவாரூர் மாவட்டம் கடல்சார்ந்த மாவட்டமாக இருப்பதால் கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உவர்ப்புத்தன்மையாக மாறுவதை தடுக்கவும், நீர் ஆவியாகாமல் மணலுக்குள் அதிக அளவில் சேகரிக்கப்படும் வகையிலும், சுற்றுப்பகுதிகளுக்கு நிலத்தடி நீர் மட் டத்தை உயர்த்தும் வகையிலும் முன்னோடித் திட்ட மாக நீர்மூழ்கி தடுப்பணைகள் அமைக்கப்பட்டன.
இதுகுறித்து ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் கூறியது: திருவாரூர் மாவட்டம் இயற்கையாகவே நீர்ப்பாதுகாப்பு பெற்ற மாவட்டமாக உள்ளது.
வருங்கால சந்ததியினருக்கு தண்ணீரை சேமித்து கொடுக்கும் வகையிலும், நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையிலும் மாவட்டத்திலுள்ள திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, குடவாசல், நன்னிலம் உள்ளிட்ட 10 ஒன்றியங்களில் தலா 5 என்ற கணக்கில் 50 நீர்மூழ்கித் தடுப்பணைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 90 நீர்மூழ்கித் தடுப்பணைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன என்றார் நிர்மல்ராஜ்.