திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 22 புதிய படிப்புகள் அறிமுகம்
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 22 புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி:
பல்கலைக்கழகத்தில் 2017 -18 கல்வியாண்டுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழகத்தில் ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் படிப்புகளுடன் 5 இளநிலை பட்டப் படிப்புகள், 3 மேல்நிலை பட்டப் படிப்புகள், 2 முதுநிலை பட்டயப் படிப்புகள், 3 பட்டயப் படிப்புகள், 3 சான்றிதழ் படிப்புகள், 6 தொழில்கல்வி பட்டயப் படிப்புகள் என மொத்தம் 22 புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்தப் படிப்புகளில் சேர விரும்புவோர், பல்கலைக்கழக மையங்களில் நேரடியாகவோ அல்லது பல்கலைக்கழக இணையதளம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.