டிஜிட்டல் ஔிபரப்பு சேவை: அரசு கேபிளில் இன்று துவக்கம்
தமிழக அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் சார்பில், இன்று முதல், 'டிஜிட்டல் ' ஒளிபரப்பு துவங்கப்படுகிறது. முதல்கட்டமாக, 32 பேருக்கு, 'செட்-டாப் பாக்ஸ்'கள் வழங்கப்படுகின்றன.
தமிழகத்தில், கேபிள், 'டிவி' ஒளிபரப்பை, 'டிஜிட்டல்' நுட்பத்தில் வழங்க, மத்திய அரசு, உரிமம் வழங்கி உள்ளது. அதற்கு தேவையான, 75 லட்சம், 'செட்-டாப் பாக்ஸ்'களை, கொள்முதல் செய்ய, தமிழக அரசு, 'டெண்டர்' விட்டது. முதல்கட்டமாக, சில ஆயிரம் பாக்ஸ்கள், வந்து விட்டன. அதனால், டிஜிட்டல் ஒளிபரப்பு இன்று துவங்குகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, 'வீடியோ கான்பரன்சிங்' முறையில், முதல்வர் பழனிசாமி, நுங்கம்பாக்கத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை, இயக்கி வைக்கிறார். ஒரு மாவட்டத்திற்கு ஒருவர் வீதம், 32 பேருக்கு, இலவச, 'செட் - டாப் பாக்ஸ்'களை, அவர் வழங்குகிறார். 125 ரூபாய் மாத கட்டணத்தில், 180 சேனல்கள் பார்க்கலாம். இதுதவிர, 'பேக்கேஜ்' வசதிகளும் உள்ளன.