பிளஸ் 2 துணை தேர்வருக்கு இன்று சான்றிதழ்
பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, இன்று(ஆக.,30), அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு, ஜூனில் நடத்தப்பட்டது. இதற்கான, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், ஏற்கனவே வழங்கப்பட்டது. இதையடுத்து, மறுமதிப்பீடு, மறுகூட்டல் மேற்கொள்ளப்பட்டது. நிரந்தர பதிவெண் பெற்ற மாணவர்கள், தேர்வில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தால், அவர்களுக்கு, ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.
மற்ற மாணவர்களுக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இந்த சான்றிதழ், இன்று முதல், தேர்வு மையங்களில் வழங்கப்படும். தேர்வர்கள், தங்கள் தேர்வு மையங்களை அணுகலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.