அனைத்து மாநிலங்களின் வாக்காளர் பட்டியல் தகவல்களும் ஒருங்கிணைக்கப்படுகின்றன
இந்திய தேர்தல் கமிஷனின் உத்தரவுப்படி, அனைத்து மாநிலங்களின் வாக்காளர் பட்டியல் தொடர்பான தகவல் தொகுப்புகளும் இ.ஆர்.ஓ.–நெட் என்பதில் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இந்த ஒருங்கிணைப்புக்காக, தமிழகத்தில் இருக்கும் வாக்காளர் பட்டியல் தகவல் தொகுப்பு ஆகஸ்டு 7–ந் தேதியன்று வழங்கப்பட்டது.
இதை ஒருங்கிணைப்பதன் மூலம் தேசிய அளவில் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். ஒரு மாநிலத்தில் உள்ள தொகுதியில் இருந்து மற்றொரு மாநிலத்தில் உள்ள தொகுதிக்கு வாக்காளர் இடம்மாறிச் செல்லும்போது, ஏற்கனவே இருந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து அவரது பெயரை எளிதாக நீக்க வழிவகை பிறக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், மாநிலங்களின் எல்லைப் பகுதியில் வசிக்கும் வாக்காளர்களில் சிலர் இரண்டு மாநில வாக்காளர் பட்டியலிலும் இடம்பெற்றிருப்பதால், அப்படிப்பட்டவர்களின் பெயரையும் நீக்க வழிபிறக்கும் என்றும் தேர்தல் அதிகாரி அலுவலக வட்டாரத்தில் கூறப்பட்டது.