மருத்துவ காப்பீடு திட்டம் : புகார் செய்ய, App அறிமுகம்
மதுரை: தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில், இதுவரை 20.68 லட்சம் பயனாளிகளின் சிகிச்சைக்காக, 4,214 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. புகார் செய்ய, 'ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மதுரையில், முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ், செயற்கை உறுப்பு பொருத்துதல் சிகிச்சை துவங்கப்பட்டது. அப்போது, மருத்துவ காப்பீடு திட்ட அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில், இத்திட்டத்தில் 1.58 கோடி குடும்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன; 1.92 லட்சம் பயனாளிகளின் சிகிச்சைக்கு, 368.07 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு மட்டும், 29 ஆயிரத்து, 521 பயனாளிகளுக்கு, 56.51 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை மறுக்கப்பட்டாலோ அல்லது நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு அதிகம் பணம் வசூலிக்கப்பட்டாலோ, கலெக்டர் அலுவலக கண்காணிப்பு குழுவிடம் பயனாளிகள் புகார் அளிக்கலாம். இதற்கென, புலனாய்வு, 'ஆப்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்ட பயனாளிகளிடமிருந்து பணம் வசூலிக்கும் மருத்துவமனைகளுக்கு, ஐந்து மடங்கு அபராதம் விதிக்கப்படுகிறது. தவறு செய்த மருத்துவமனை மீது, இடைக்கால தடை, தகுதி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.