எம்.எஸ்சி., நர்சிங் படிக்க வாய்ப்பு
எம்.எஸ்சி., நர்சிங் போன்ற முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு, செப்., 8க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், எம்.எஸ்சி., நர்சிங் மற்றும் எம்.எஸ்சி., மாலிகுலர் வைராலஜி படிப்புகளுக்கான, விண்ணப்ப வினியோகம், நேற்று துவங்கியது. விண்ணப்பங்களை, www.tnhealth.org / www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில், செப்., 7 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
'பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், செப்., 8ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு வந்து சேர வேண்டும். மாணவர் சேர்க்கை, செப்., மாத இறுதியில் நடைபெறும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.