பி.எஸ்.எல்.வி., சி-39 ‛COUNT DOWN ஆகஸ்ட் 30ல் துவக்கம்
வரும் 31ம் தேதி விண்ணில் பாயும்பி.எஸ்.எல்.வி., சி-39 ராக்கெட்டுக்கான 29 மணி நேர கவுண்டவுன் ஆகஸ்ட் 30ல் துவங்குகிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி 39 ராக்கெட் வரும் 31ம் தேதி மாலை விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்கான 29 மணிநேர கவுண்டவுன் நாளை பகல் 1.59 மணிக்கு துவங்குகிறது. 29 மணி நேர கவுண்டவுன் மாலை 6.59 மணிக்கு முடிவடைந்தவுடன் ராக்கெட் விண்ணில் பாயவுள்ளது. தற்போது ராக்கெட்டின் பாகங்கள் பொருத்தப்பட்டு, எரிபொருள் நிரப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
320 டன் எடையும் 44.4 மீ., உயரமும் கொண்ட இந்த ராக்கெட்டில், இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1-எச் செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இதன் மூலம் இயற்கை சீற்றம், பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும்.