ஓ.பி.சி., கிரீமிலேயர் வருமான வரம்பு உயர்வு
ஓ.பி.சி.,எனப்படும் இதர பிற்பட்டோர் பிரிவினரில், 'கிரீமிலேயர்' எனப்படும் வசதி படைத்தவர்கள், சலுகைகளை பெறுவதற்கான ஆண்டு வருமான வரம்பை, 6 லட்சம் ரூபாயில் இருந்து, 8 லட்சம் ரூபாயாக உயர்த்த, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதில், எடுக்கப் பட்ட முடிவுகள் குறித்து, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:
கல்வி,வேலைவாய்ப்பு போன்றவற்றில்ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்பட்டோர் பிரிவினருக்குஇடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இந்தபிரிவை சேர்ந்த உயர் வருமான பிரிவினர், இட ஒதுக்கீட்டு சலுகைகளைப் பெறுவதற்கான, ஆண்டு வருமான வரம்பு, ஆறு லட்சம் ரூபாயாக இருந்தது. இதை, எட்டு லட்சம்ரூபாயாக உயர்த்த மத்திய அமைச்ச ரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ஆண்டு வருமானம், எட்டு லட்சம் ரூபாய் வரை உள்ளவர் களுக்கு, ஓ.பி.சி.,க்கான சலுகைகள் கிடைக்கும்.
தனியார் நிறுவனங்களிலும், இந்த இட ஒதுக்கீட்டு சலுகைகளை விரிவுபடுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப் பட்டோர் பிரிவினருக்கான மத்தியப் பட்டியலில் சேர்க்கப்படாத ஜாதிகளையும் சேர்ப்பது குறித்து ஆராய்வதற்கு, ஒரு கமிஷன் அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போது, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்கம் உட்பட, 11 மாநிலங்களில், சில ஜாதிகள், ஓ.பி.சி., மாநிலப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த ஜாதியினருக்கு, அரசு வேலை, கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதேநேரத்தில் மத்திய பட்டியலில்அவை இடம்பெறவில்லை.இது போன்று
மத்தியப்பட்டியலில் சேராத ஜாதிகளையும் சேர்ப்பது குறித்து, கமிஷன் ஆராயும். கமிஷன் தலைவர் நியமனத்தில் இருந்து,12 வாரங் களுக்குள் அறிக்கை கிடைக்கும்.