200 ரூபாய் நோட்டு: அரசாணை வெளியீடு
பணத் தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில், 200 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில், 2016, நவம்பரில், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை, பிரதமர் மோடி வெளியிட்டார்.
அதன்படி, 'புழக்கத்தில் இருந்த, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என அறிவிக்கப்பட்டது. அதற்கு பதிலாக, புதிதாக, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.இருப்பினும் பணத்தட்டுபாடு குறையவில்லை.
சில்லரை கிடைப்பதிலும் சிக்கல் உள்ளது. இதையடுத்து, 200 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டது.
புதிதாக, 200 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த நோட்டுகள் அச்சடிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் புழக்கத்துக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தவிர, ஒளிரும் நீல வண்ணத்திலான, 50 ரூபாய் நோட்டுகளை வெளியிடவும், ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.