மனித மரபணு கொண்ட ஜீப்ரா மீன்கள் : காந்திகிராம மாணவி ஆய்வு
கங்கை ஆற்றில் கலக்கும் கழிவுகளால் மனித மரபணு (டி.என்.ஏ.,) கொண்ட 'ஜீப்ரா' மீன்கள் அழிவது, காந்தி கிராம பல்கலை உயிரியல் துறை மாணவி சுகன்யா நடத்திய ஆய்வில் தெரிந்துள்ளது.
இம்மீனின் உடல் 6-7 செ.மீ., நீளம் கொண்டது, இதன் ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகள். கங்கை சமவெளியில் சிறிதளவே காணப்படும். இந்த வகை மீன்களின் மரபணுக் கூறுகள், மனித மரபணுவை 76.8 சதவீதம் ஒத்திருக்கும். எனவே இந்த மீன்களின் வாழ்வியல் கூறுகள் குறித்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்த மீன்களின் அழிவு குறித்த ஆராய்ச்சியில், காந்திகிராம பல்கலை உயிரியல் துறை தலைவர் ராஜன் வழிகாட்டுதலில், மாணவி சுகன்யா ஈடுபட்டு உள்ளார். அவர் கூறியதாவது: இரும்பின் 'நானோ துகள்' (நுண்ணிய துகள்) நீரில் கலந்தால் மீன்களுக்கு எத்தகைய பாதிப்பு ஏற்படும் என கண்டறிந்தேன். இத்துகள்கள் மீன்களின் உடலில்
ஊடுருவும் போது ஏற்படும் பாதிப்பும் கணக்கிடப்பட்டுள்ளது. கங்கை ஆற்றுப்படுகைகளில், இரும்பு துகள்கள் அதிகளவு இருப்பதால் மீன்கள் அழிகின்றன. கழிவுநீர் கலப்பதை தடுத்தால் 'ஜீப்ரா' மீன்களை பாதுகாக்கலாம். மனித டி.என்.ஏ., க்கள் 'ஜீப்ரா' மீன்களின் மூலக்கூறு
களுடன் ஒத்திருப்பதால், மனிதர்கள் பற்றிய ஆய்வுக்கு இம்மீன்கள் பயன்படுத்தலாம், என்றார்.