சூரிய சக்தியால் உலகை சுற்றி வந்த சோலார் விமானம்
சூரிய சக்தியை மட்டுமே பயன்படுத்தி, உலகை சுற்றி வரும் சோதனை முயற்சியை சோலார் இம்பல்ஸ் 2 விமானம் நிறைவு செய்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்டுகளிலிலிருந்து பயணத்தை தொடங்கிய இந்த விமானம், உலகை சுற்றி வருவதற்கு 16 மாதங்கள் எடுத்துகொண்டு, உள்ளூர் நேரப்படி அதிகாலை நான்கு மணி தாண்டிய சற்று நேரத்தில் அபுதாபியை வந்தடைந்தது.
உலகை மாற்றக்கூடிய மாசு விளைவிக்காத தொழில்நுட்பத்தின் ஆற்றலை இந்த விமானம் நிரூபித்துள்ளதாக, இந்த முயற்சிக்கு பின்னால் இருக்கும் சுவிட்சாலாந்திலிருந்து இயங்கும் அணி கூறியிருக்கிறது.
ஒரு சொட்டு எரிபொருள் கூட இல்லாமல், சூரிய சக்தியால் மட்டுமே முதல்முறையாக சோலார் இம்பல்ஸ் விமானம் உலகை சுற்றி வந்துள்ளது.