இந்திய மருத்துவத்தில் மருந்தாளுனர் படிப்பு : எம்.டி., யோகாவுக்கும் விண்ணப்பம்
இந்திய மருத்துவப் படிப்புகளில், இரண்டரை ஆண்டு கால ஒருங்கிணைந்த மருந்தாளுனர், 'நர்சிங் தெரபிஸ்ட்' படிப்புகளுக்கு, விண்ணப்ப வினியோகம் துவங்கி
உள்ளது. சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள சித்த மருத்துவக் கல்லுாரி களில், இந்திய மருத்துவ முறையில், ஒருங்கிணைந்த மருந்தாளுனர், நர்சிங் தெரபிஸ்ட் படிப்புகளுக்கு, 200 இடங் கள் உள்ளன. இதற்கான விண்ணப்ப வினியோகம், சென்னை, பாளையங்கோட்டை, திருமங்கலம், நாகர்கோவில் ஆகிய, இந்திய மருத்துவக் கல்லுாரிகளில், நேற்று துவங்கியது.
சென்னை, சித்த மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் உள்ள, இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்லுாரி யில், எம்.டி., படிப்பில், யோகா, அக்குபஞ்சர், இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு, தலா, ஐந்து இடங்கள் என, 15 இடங்கள் உள்ளன. இதற்கு, 'ஆன்லைன்' வழியாக விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது. ஆக., 12 வரை விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்; அன்று மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விபரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.