அண்ணாமலைப் பல்கலை. யில் பிஇ, பிஎஸ்சி வேளாண் படிப்புகளுக்கு ரேண்டம் எண் வெளியீடு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை.யில் பிஇ, பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை, பிஎஸ்சி நர்சிங், பி.பார்மசி படிப்புகளில் சேருவதற்கான சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) 13/07/2016 அன்று வெளியிடப்பட்டது.
அண்ணாமலைப் பல்கலை.யில் அனுமதிக்கப்பட்ட இளநிலை அறிவியல் வேளாண்மை படிப்புக்கு (1000 இடங்கள்) 11,595 விண்ணப்பங்களும் தோட்டக்கலை படிப்புக்கு (70) 601 விண்ணப்பங்களும், இளநிலை பொறியியல் படிப்புக்கு (810) 1,988 விண்ணப்பங்களும், இளநிலை அறிவியல் செவிலியர் படிப்புக்கு (100) 1216 விண்ணப்பங்களும், இளநிலை மருந்தாக்கியல் படிப்புக்கு (60) 1111 விண்ணப்பங்களும் பெறப்பட்டன.
இந்தப் படிப்புகளுக்கான சமவாய்ப்பு எண்களை புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் செ.மணியன் வெளியிட்டார்.
பின்னர், துணைவேந்தர் செ.மணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: மாணவர்கள் பல்கலை. இணையதளம் www.annamalaiuniversity.ac.in-ல் தங்களது ரேண்டம் எண்ணை தெரிந்து கொள்ளலாம். தரவரிசைப் பட்டியல் (ரேங்க் பட்டியல்) ஜூலை 16-இல் வெளியிடப்படும்.
மாணவர்கள், மேல்நிலைப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும், தமிழக அரசின் இட ஒதுக்கீடு விதிப்படியும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர்.
மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடங்கள் தமிழக அரசின் விதிப்படி ஒதுக்கப்படும். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும், விவரங்களுக்கும், தகவல்களுக்கும் பல்கலை. இணைய தளம் www.annamalaiuniversity.ac.in பார்க்கலாம் என்றார்.