மாணவரின் மன அழுத்ததை குறைக்க மின் நூல்கள் உதவும்
மாணவர்களுக்கு புத்தகச் சுமையிலிருந்தும், மன அழுத்தத்திலிருந்தும் விடுபடுவதற்கு மின் நூல்கள் பெரிதும் உதவுகின்றன என தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் மு.பாஸ்கரன் கூறினார்.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல், பண்பாட்டு புலம் சார்பில் "தமிழ் மின் நூல்' உருவாக்கம் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்பட்டது.
கருத்தரங்கைத் தொடக்கி வைத்து துணைவேந்தர் பாஸ்கரன் பேசியது: ஆசிரியர்கள் கற்பித்தலில் நவீன தொழில்நுட்பங்களைக் கையாள வேண்டும் என்பதுடன், மாணவர்களுக்கு கல்வியை புதிய வடிவில் வழங்குவதற்கான திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
வரும் காலங்களில் கற்றல், கற்பித்தலில் மின் நூல்களுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. மாணவர்களுக்கு புத்தகச் சுமையிலிருந்தும், மன அழுத்தத்திலிருந்தும் விடுபடுவதற்கு மின் நூல்கள் பெரிதும் உதவும் என்றார் அவர்.