நிதித் திறனாய்வு சிந்தனைகளை வகுப்பறைகளில் ஊக்குவிக்க வேண்டும்
நிதித் திறனாய்வு சிந்தனைகளை வகுப்பறைகளில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும் என தேசியப் பங்குச் சந்தை தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா கூறினார்.
சென்னையில் , மாணவர்கள் பங்கேற்ற மாதிரி ஐ.நா. சபை மாநாட்டில் அவர் மேலும் பேசியதாவது:-
நிதி ஆளுமை குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் இளம் வயது முதலே வழங்கப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். எனவே, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு நிதி ஆளுமை குறித்த பயிற்சிகள்வழங்க ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும்.
நிதித் துறையில் மாணவர்களால்தான் புரட்சியை ஏற்படுத்த முடியும். தேசியப் பங்குச் சந்தையில் பணியாற்றுவோரின் சராசரி வயது 24-ஆக உள்ளது.
இவ்வாறு தற்காலத்துக்கு ஏற்ற வகையில் இளம் வயது முதலே பாடங்களுடன் நிதி சார்ந்த சிந்தனைகளும் வழங்க வேண்டும். கல்விக்கூடங்கள் தலைமைப் பண்பை வளர்த்து நல்ல எதிர்காலத் தலைவர்களை உருவாக்க வேண்டும் என்றார்.