கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழில்நுட்பக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் (BC, MBC/DNC) மாணவர்களுக்கு பல்வேறு திட்டத்தின்கீழ் உதவித்தொகையை தமிழக அரசு வழங்கிவருகிறது.
இதன்படி, உதவித்தொகை பெறுவோரின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்படிவங்களை அவரவர் பயிலும் கல்வி நிறுவனங்கள் அல்லது www.tn.gov.inbcmbcdept என்ற இணையதள முகவரியில் பெற்று பூர்த்தி செய்து தங்களது வங்கிக் கணக்கு எண், ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் தகவல்களைப் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரை அணுகலாம் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.