முதல்முறையாக 22 இந்திய மொழிகளை சப்போர்ட் செய்யும் செல்போன் அறிமுகம்; ரூ.1,500-க்கு விற்பனை
முதல்முறையாக இந்தியாவில் 22 உள்நாட்டு மொழிகளை சப்போர்ட் செய்யும் செல்போன் அறிமுகமாகியுள்ளது. வழக்கமாக, ஆங்கிலம், இந்தி மற்றும் சில இந்திய மொழிகளுடன் செல்போன்கள் வெளிவருகின்றன. ஆனால், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கள் தாய்மொழியில் செல்போன் வசதிகளை பெற மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் இணைந்து உள்நாட்டு மொபைல் தயாரிப்பு நிறுவனமான லாவா இந்த செல்போனை வெளியிடுகிறது.
இந்த செல்போனில் ஆங்கிலம் தவிர, இந்தி, அசாமிஸ், பெங்காலி, போடோ, டோக்ரி, குஜராத்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கனி, மைதிலி, மணிப்புரி, மலையாளம், மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 22 இந்திய மொழி வசதிகள் உள்ளது.