வேகமாக உயரும் கடல்நீர் மட்டம்
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடல்நீர் மட்டம் 14 செ.மீ வரை உயர்ந்திருப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவு எச்சரித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள புவி மற்றும் கோள் அறிவியல் துறை சார்பில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக புவி வெப்பம் குறித்தும், கடல்நீர் மட்டம் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடல்நீர் மட்டம் 14 செ.மீ வரை உயர்ந்திருக்கும் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
இது குறித்து புவி மற்றும் கோள் அறிவியல் துறையின் துணை பேராசரியர் ராபர்ட் கோப் கூறும் போது, ‘‘கடந்த நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு 20-ம் நூற்றாண் டில் கடல்நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. அதிலும் கடைசி 20 ஆண்டுகளில் வெகுவேகமாக கடல்நீர் மட்டம் உயர்ந்துள்ளது. மனிதர்கள் ஏற்படுத்திய சுற்றுச் சூழல் பாதிப்பே இதற்கு காரணம்’’ என்றார்.
அதே சமயம் கடந்த 1000 முதல் 1400-ம் ஆண்டு வரை புவி குளுமை யாக இருந்ததால், கடல்நீர் மட்டம் 8 செ.மீ வரை குறைந்திருந்ததாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.