மாணவர்கள் இந்திய தேசிய மாணவர் படையில் இணைய பிரதமர் அழைப்பு!
NCCயில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு முக்கியம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
NCC எனப்படும் தேசிய மாணவர் படையில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு முக்கியம். நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் ஆற்றல், திறன்கள் மற்றும் அர்ப்பணிப்பு அவசியம். தேசிய இளைஞர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படும் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான ஜனவரி 12ம் தேதி, அவரது 162வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்படும். இதையொட்டி மாபெரும் இளைஞர்கள் மாநாடு நடத்தப்படும். அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்களை அரசியலுடன் இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இளைஞர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது.
சிட்டுக்குருவிகளை பாதுகாக்க தமிழகத்தில் நடைபெறும் முயற்சிக்கு பாராட்டுக்கள். சென்னையில் உள்ள கூடுகள் என்ற தன்னார்வ அமைப்பு, மாணவர்கள் உதவியுடன் கூடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மரத்தால் ஆன கூடுகளை தயாரிக்க மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பள்ளி வளாகங்கள் உள்ளிட்ட கட்டடங்களின் வெளிப்புறங்களில் கூடுகள் பொருத்தப்படுகின்றன. சிட்டுக்குருவிகள் இனப்பெருக்கம் செய்ய இந்த கூடுகள் பெரும் உதவியாக உள்ளன. இவ்வாறு பிரதமர் உரையாற்றினார்