ஆதார் இலவச புதுப்பிப்பு சேவை ஜூன் 12, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் தகவல்களை ஆன்லைனில் இலவசமாக புமுப்பிக்க செய்வதற்கான காலக்கெடுவை மீண்டும் நீட்டித்துள்ளது. UIDAI அமைப்பு சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், தனிநபர்கள் தங்கள் ஆதார் விவரங்களை 2025 ஜூன் 14 வரை இலவசமாக புதுப்பிக்கலாம் என்று UIDAI உறுதிப்படுத்தியது.
இந்த இலவச சேவைக்கான முந்தைய காலக்கெடு 2024 டிசம்பர் 14 அதாவது இன்று, கடைசியாக இருந்த நிலையில், தற்போது 2025 ஜூன் 14 வரை இலவசமாக புதுப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்பு மூலம் 2025 ஜூன் 14 க்குப் பிறகு, ஆதார் மையங்களில் நேரடியாக செய்யப்படும் அப்டேட்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். இந்த இலவச அப்டேட் சேவை myAadhaar இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆதார் மையங்களுக்குச் சென்று புதுப்பித்தால் கட்டணம் செலுத்த வேண்டும். ஆதார் வைத்திருக்கும் இந்திய மக்கள் அனைவரும் பயனடையும் வகையில் இலவச ஆன்லைன் ஆவண பதிவேற்ற வசதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக UIDAI தெரிவித்துள்ளது. தனிநபர்கள் தங்கள் ஆதார் தரவுகளில் புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் அப்டேட் செய்துக்கொள்வதை ஊக்குவிக்க UIDAI அமைப்பு உறுதியாக உள்ளது. இந்த இலவச சேவை myAadhaar இணையதளம் மூலம் மட்டுமே அணுக முடியும்.
ஒவ்வொரு தனிநபருக்கும் ஆதார் எண் ஒரு தனித்துவ அடையாளமாக செயல்படுகிறது. இது அவர்களின் தனிப்பட்ட பயோமெட்ரிக் தரவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டு நபர்களுக்கு ஒரே எண் இருக்க முடியாது என்பதை உறுதி செய்கிறது. இதை அடிப்படையாக வைத்து தற்போது வங்கிகள், நிதி சேவைகள், மானியங்கள் என அனைத்தும் இணைக்கப்படுவதால் நாட்டின் நிதி வெளிப்படைத்தன்மை அதிகரிக்கிறது. இந்த ஆதார் கட்டமைப்பு மூலம் மத்திய மாநில அரசு திட்டங்களில் நிதி கசிவுகள் மற்றும் விநியோக குறைப்பாடுகளை குறைக்கிறது.
ஆதார் விவரங்களை ஆன்லைனில் இலவசமாக அப்டேட் செய்யும் முறை:
முதலில், அதிகாரப்பூர்வ UIDAI வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
'My Aadhaar' பகுதிக்குச் சென்று 'Update Your Aadhaar' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
'Update Aadhaar Details (Online)' பக்கத்தில், 'Document Update' என்பதைக் கிளிக் செய்யவும்.
அடுத்து, உங்கள் ஆதார் எண் மற்றும் வழங்கப்பட்ட கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, பின்னர் 'Send OTP' என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிடவும்.
பெயர், முகவரி அல்லது பிறந்த தேதி போன்ற நீங்கள் புதுப்பிக்க விரும்பும் குறிப்பிட்ட விவரங்களைத் தேர்ந்தெடுக்கவும். சரியான தகவலை உள்ளிட்டு தேவையான ஆதார ஆவணங்களைப் பதிவேற்றவும்.
உங்கள் புதுப்பிப்பு கோரிக்கையைச் சமர்ப்பித்தவுடன், உங்கள் புதுப்பிப்பின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கப் பயன்படும் புதுப்பிப்பு கோரிக்கை எண் (URN) SMS மூலம் உங்களுக்கு அனுப்பப்படும். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்