வேலை வாய்ப்பு அலுவலக பதிவு: பள்ளியிலேயே பதிய சிறப்பு ஏற்பாடு
12ம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலேயே ஆன்-லைன் மூலம் வேலைவாய்ப்பு பதிவு செய்து கொள்ளலாம் பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தங்களது சான்றிதழை பதிவு செய்யும்போது கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.எனவே மாணவர்களின் நலன் கருதி, அவர்கள் படித்த பள்ளிகளிலேயே ஆன்-லைன் மூலமாக முதல் பதிவு செய்து கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, 2020-21ம் கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 மாணவர்கள், தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழுடன், அடுத்த மாதம் 1ம் தேதி வரை தாங்கள் பயின்ற பள்ளியிலேயே வேலைவாய்ப்புக்கான பதிவு செய்து கொள்ளலாம்.இன்று 17ம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ் பெற பள்ளிக்கு செல்லும் பிளஸ் 2 மாணவர்கள், 10ம் வகுப்பில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததற்கான அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.