இனி அனைத்து மாணவர்களுக்கும் APAAR அட்டை அவசியம்!
இந்திய குடிமக்களுக்கான அடையாள ஆவணமாக ஆதார் (Aadhaar) செயல்பட்டு வருகிறது. இப்போது ஆதாரை மிஞ்சும் புதிய அபார் கார்டு (APAAR Card) என்ற கட்டாய அடையாள ஆவணத்தை மத்திய அரசு மாணவர்களுக்காக (Students) பிரத்தியேகமாக அறிமுகம் செய்துள்ளது.
மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த அபார் அடையாள அட்டை (APAAR Identification Student Card), இந்தியாவில் உள்ள அணைத்து மாணவர்களையும் ஒரே நாடு, ஒரே அடையாள அட்டை திட்டத்தின் கீழ் சேர்க்கிறது. இது ஆதார் அட்டை (Aadhar card) போல வெறும் ஒரு அடையாள அட்டையாக செயல்படாமல், மாணவர்களின் வரலாற்று தகவல்களை குறிப்பிடும் பிரத்தியேகமான நன்மைகளை வழங்கும் ஒரு அட்டையாக செயல்படப்போகிறது.
பள்ளி மாணவர்கள் (school students) முதல் கல்லூரி மாணவர்கள் (college students) வரை, அனைவருக்கும் இந்த அபார் அட்டை (APAAR card details) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த அபார் அட்டையின் நன்மைகள் (Benefits of APAAR card) என்ன? இதை எப்படி ஆன்லைனில் விண்ணப்பித்து வாங்குவது (How to register for APAAR card online)? இந்த அட்டையை வைத்து மாணவர்கள் என்னென்ன வெகுமதிகளை பெற முடியும் என்பது போன்ற முழு விபரமும் இங்கே. மத்திய அரசு (Central Indian Government) அறிமுகம் செய்துள்ள இந்த அபார் அட்டை வெகு விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இது மாணவர்களுக்கு மட்டுமானது. பொதுமக்களுக்கு வழக்கம் போல ஆதார் அட்டை பயன்படுத்தப்படும். மாணவர்களுக்கு ஆதார் அட்டையுடன் கூடுதல் சேர்ப்பாக இந்த அபார் அட்டை வழங்கப்படும்
அரசு (government schools) மற்றும் தனியார் பள்ளிகளில் (private schools) கல்வி பயிலும் சிறுவர், சிறுமியர்களுக்கு மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு இந்த அட்டை இனி கட்டாயமானது. இனி வரும் காலத்தில் இது மிகவும் முக்கியமான ஆவணமாக மாறப்போகிறது. இந்த அட்டையில் ஒவ்வொரு மாணவர் பற்றிய கல்வி பதிவுகள் பதிவு செய்யப்படும். மாணவர்களின் படிப்பு திறன், விளையாட்டு திறமை, கலை திறன் போன்ற அணைத்து தனித்தகவல்களும் இதில் பதிவிடப்படும். அதுமட்டுமின்றி, மாணவருக்கு வழங்கப்படும் பட்டச் சான்றிதழ்கள் (degree certificates), கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி ஊக்குவிக்கும் தொகை, நன்கொடை போன்ற விபரங்களும் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக, இந்த அபார் அடையாள அட்டை வைத்து போலி மதிப்பெண் சான்றிதழ் பெரும் குற்றங்கள் மற்றும் மோசடிகளை தவிர்க்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவரின் கல்வி வரலாற்றை அப்படியே வெளிப்படையாக காண்பிக்கும் அட்டையாக இவை இருக்க போகிறது.
அபார் கார்ட்டை பெற மாணவர்கள் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் (How students should apply to get APAAR Card): இந்த புதிய அபார் அட்டையை பெற மாணவர்கள் நீண்ட வரிசையிலும், நெரிசலிலும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. காரணம், மத்திய அரசு இதை ஆன்லைன் (APAAR Card Online Register) மூலம் விண்ணப்பிக்க கூடிய வழியை உருவாக்கியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதை பெற்றோர்கள் அல்லது மாணவர்கள் ஆன்லைன் மூலம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். சரி, இப்போது எப்படி ஆன்லைன் மூலம் அபார் கார்டுக்கு விண்ணப்பிப்பது என்று பார்க்கலாம்.
அபார் அடையாள அட்டை, அகாடமிக் பாங்க் ஆஃப் கிரெடிட் (Academic Bank of Credit) மூலம் பதிவு செய்யப்படுகிறது. ஆகையால், - நீங்கள் அகாடமிக் பாங்க் ஆஃப் கிரெடிட் இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.. - உங்கள் மொபைல் (mobile) அல்லது லேப்டாப் (laptop) இல் abc.gov.in என்று டைப் செய்து இணைய பக்கத்திற்கு செல்லவும் - பிறகு பக்கத்தில் லாகின் செய்து உள்நுழையவும் - ஆதார் அட்டை எண் (Aadhaar number) விபரங்கள் மற்றும் மொபைல் எண் (mobile number) தகவலை உள்ளிடவும் - மாணவர்கள் பயிலும் கல்லூரி அல்லது பள்ளியின் விபரங்களை உள்ளிடவும் - என்ன கோர்ஸ் (course) அல்லது வகுப்பு (standard) என்பதை நிரப்பவும் - படிவங்களை நிரப்பிய பிறகு, உங்கள் 12 இலக்க எண்ணுடன் அபார் ஐடி கார்டு (APAR ID card) உருவாக்கப்படும் - அதை நேரடியாக டவுன்லோட் (APAAR Card Download) செய்துகொள்ளலாம்,
அனைத்து மாணவர்களுக்கும் இது கட்டாயம் என்பதனால் இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் மற்றும் இந்த பதிவை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பகிர்ந்து அவர்களுக்கு அபார் கார்டின் பயன்பாட்டை பற்றி தெரியப்படுத்துங்கள்.