இளம் வயதில் பானி பூரி விற்ற ஜெய்ஸ்வால் தத்தெடுத்து வளர்த்த பயிற்சியாளர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணம் பேட்டிங் செய்ய மற்ற வீரர்கள் எல்லாம் தடுமாறிய போது முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன ஜெய்ஸ்வால், இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி 161 ரன்கள் குவித்தார்.
இதில் 15 பவுண்டரி,மூன்று சிக்ஸர்கள் அடங்கும். இதன் மூலம் ஜெய்ஸ்வால் தன்னுடைய நான்காவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்து இருக்கிறார். சச்சின், ரிஷப் பண்ட் ஆகியோருக்கு பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் சதம் அடித்த இளம் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
இதில் 15 பவுண்டரி,மூன்று சிக்ஸர்கள் அடங்கும். இதன் மூலம் ஜெய்ஸ்வால் தன்னுடைய நான்காவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்து இருக்கிறார். சச்சின், ரிஷப் பண்ட் ஆகியோருக்கு பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் சதம் அடித்த இளம் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
அது மட்டும் அல்லாமல் 15 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 1568 ரன்களை ஜெய்ஸ்வால் குவித்திருக்கிறார். ஜெய்ஸ்வால் சர்வதேச டி 20 கிரிக்கெட்டிலும் ஒரு சதம், ஐந்து அரை சதம் அடித்திருக்கிறார். வெறும் 22 வயதான ஜெய்ஸ்வால் இவ்வளவு சாதனைகளை படைத்திருக்கிறார் என்றால் அது வெறும் சாதாரணமாக கிடைத்துவிடவில்லை. ஜெய்ஸ்வால் ஒன்றும் வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவர் கிடையாது. உத்தர பிரதேசத்தில் சாதாரண ஏழ்மை குடும்பத்தில் பிறந்தவர். குடும்ப கஷ்டம் காரணமாக ஜெய்ஸ்வாலின் அண்ணன், சிறு வயதிலேயே வேலைக்கு சென்று விட்டார்.
ஜெய்ஸ்வால் சிறுவயதில் கிரிக்கெட் நன்றாக விளையாடியதால் அவர் தனது பத்தாவது வயதில் மும்பைக்கு குடியேறினார். அங்கு மைதான ஊழியர்கள் தங்கும் டென்ட் கொட்டாயில் ஜெய்ஸ்வால் தங்கி இருந்தார். தன்னுடைய வாழ்க்கையை ஓட்டுவதற்காக ஜெய்ஸ்வால் பானி பூரி விற்று கிரிக்கெட்டும் விளையாடி வந்திருக்கிறார். ஜெய்ஸ்வாலின் திறமையை பார்த்து பயிற்சியாளர் ஜூவாலா சிங் தான் அவரை தத்தெடுத்து பயிற்சி வழங்கியிருக்கிறார்.
வாழ்க்கையில் தத்தளித்து வந்த ஜெய்ஸ்வாலுக்கு அதன் பிறகு வெறும் ஏற்றமே கிடைத்தது. கிரிக்கெட் மட்டும்தான் நமது வாழ்வை கரை சேர்க்கப் போகிறது என்பதை உணர்ந்த ஜெய்ஸ்வால் இரவும் பகலும் கடுமையாக உழைத்து அண்டர் 19 கிரிக்கெட்டில் இடம் பிடித்தார். அதன் பிறகு ஐபிஎல் தொடரில் ஜெய்ஸ்வால் தேர்வான பிறகு அவருடைய வாழ்க்கையே மாறியது. ஐ பி எல் தொடரிலும் அதிரடியாக விளையாடி தனது திறமையை ஜெய்ஸ்வால் நிரூபித்தார். விஜய் ஹசாரே கோப்பையில் உள்ளூர் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதேபோன்று ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ஜெய்ஸ்வால் தொடர்ந்து மூன்று சதம் அடித்து நமக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாட தெரியும் என்பதை நிரூபித்தார்.
இந்த சூழலில் தான் புஜாரா டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்ட போது பின் நம்பர் மூன்றாவது வீரராக விளையாடுகிறேன் என்று கூறினார். இதனையடுத்து ஜெய்ஸ்வாலுக்கு தொடக்க வீரராக விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்து ஜெய்ஸ்வால் இரண்டு இரட்டை சதம் உட்பட நான்கு சதம், 8 அரைசதம் என டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் இந்திய வீரராக விளங்குகிறார்.
தற்போது ஆஸ்திரேலிய மண்ணில் 160 ரன்கள் விளாசி இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறார்.பானி பூரி விற்றாலும் கடுமையாக உழைத்தால் வாழ்க்கையில் நிச்சயம் சாதிக்கலாம் என்பதற்கு ஜெய்ஸ்வாலின் வாழ்க்கை ஒரு உதாரணமாக ஆகும்.