வருமான வரி மசோதா 2025 PAN - Aadhar விதிகள்

வருமான வரி மசோதா 2025 புதிய சட்டத்தின் கீழ PAN-AADHAR விதிகளை பற்றி பார்ப்போம். புதிய சட்டத்தின் கீழ் PANக்கு விண்ணப்பிக்கும் போது மற்றும் வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்யும் போதும் ஆதாரை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வருமான வரி தொடர்பான புதிய சட்டத்தில் ஆதார் பான் கார்டு பற்றி விரிவாக பார்ப்போம்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் (பிப்ரவரி 13) லோக்சபாவில் வருமான வரி மசோதா 2025 ஐ அறிமுகப்படுத்தினார். இந்த புதிய மசோதா 1961 ஆம் ஆண்டின் காலாவதியான வருமான வரிச் சட்டத்தை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது. ஏப்ரல் 2026 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மசோதா குறித்து ஆய்வு செய்ய நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அமைப்பதற்கான தீர்மானத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்மொழிந்தார். இதையடுத்து கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிதி விவகாரங்கள் தொடர்பான கூட்டுக்குழு புதிய வரி திட்டங்களை ஆய்வு செய்து, தேவைப்பட்டால் மாற்றங்களைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் பாதியின் முதல் நாளான மார்ச் 10 அன்று நிதி விவாகரங்கள் தொடர்பான கூட்டுக்குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் இந்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. இந்த புதிய வருமான வரி மசோதா (2025), இன்று வரை நடைமுறையில் உள்ள திருத்தப்பட்ட சட்டத்தின் மொழியை எளிமையாக்குவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. சாமானிய மக்களுக்கு எழும் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வருமான வரி மசோதா 2025, வரி செலுத்துவோர் அறிந்திருக்க வேண்டிய நிரந்தர கணக்கு எண் (PAN) மற்றும் ஆதார் அட்டை தொடர்பான பல விதிகளை எளிமைப்படுத்தி இருக்கிறது
ஆதார் எப்போது கட்டாயம்? புதிய வருமான வரி மசோதாவின் (2025) கீழ், பான்-க்கு விண்ணப்பிக்கும் போது மற்றும் வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்யும் போது ஆதார் எண்ணை வழங்க வேண்டும். மேலும், பான் கார்டு வைத்துள்ளவர்கள், ஆதார் எண்ணு வைத்துள்ளவர்கள், வருமான வரி அதிகாரியிடம், அவர்கள் கேட்கும் வடிவத்தில் தங்கள் ஆதார் எண்ணைத் தெரிவிக்க வேண்டும். ஒருவேளை ஆதார் எண்ணை வழங்கத் தவறினால், அந்த நபரின் பான் கார்டு செயலிழந்துவிடும். எப்போது பான் கார்டு கட்டாயம்? ஒவ்வொருவரும், அனைத்து வருமான வரி வருமானங்களிலும், எந்தவொரு வருமான வரி அதிகாரியுடனான கடிதப் பரிமாற்றத்திலும், வருமான வரிச் சட்டம் 2025 இன் கீழ் பணம் செலுத்துவதற்கான அனைத்து சலான்களிலும், தங்கள் நிரந்தரக் கணக்கு எண்ணை (பான் எண்) குறிப்பிட வேண்டும்.
எப்போது பான் கார்டு கட்டாயம்? ஒவ்வொருவரும், அனைத்து வருமான வரி வருமானங்களிலும், எந்தவொரு வருமான வரி அதிகாரியுடனான கடிதப் பரிமாற்றத்திலும், வருமான வரிச் சட்டம் 2025 இன் கீழ் பணம் செலுத்துவதற்கான அனைத்து சலான்களிலும், தங்கள் நிரந்தரக் கணக்கு எண்ணை (பான் எண்) குறிப்பிட வேண்டும்.
முகவரி மாற்றம் குறித்த அறிவிப்பு ஒவ்வொரு நபரும் தங்கள் முகவரி, பெயர் அல்லது வணிக விவரங்களில் தங்கள் பான் ஒதுக்கீட்டிற்கு பின்ன மாற்றங்கள் ஏற்பட்டால், அதனை வருமான வரித்துறையில் உள்ள மதிப்பீட்டு அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும்.
பான் கார்டுக்கு பதிலாக ஆதார் வழங்கலாம் உங்களுக்கு இன்னும் பான் கார்டு ஒதுக்கப்படவில்லை என்றால், அப்படியான சூழலில், அவர்கள் தங்கள் ஆதார் எண்ணை வழங்கலாம். அதேபோல் உங்களிடம் ஏற்கனவே பான் எண் இருந்தாலும், அதைகுறிப்பிடவிரும்ப வில்லை என்றால், வரி அதிகாரியிடம் அதை பற்றி தெரிவித்துவிட்டு,அதற்கு பதிலாக உங்கள் ஆதார் எண்ணை மேற்கோள் காட்டிக்கொள்ளலாம். ஏனெனில் இப்போது பான் ஆதார் லிங்கில் இருப்பதால் ஏதாவது ஒன்றைகாட்டினால் போதும்.
யார் பான் பெற வேண்டும்? பான் கார்டு என்பது நிதி பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கவும் வரி ஏய்ப்பைத் தடுக்கவும் வருமான வரித் துறையால் பயன்படுத்தப்படும் எண் ஆகும். எனவே புதிய சட்டத்தின்படி, ஒரு தனிநபர் பின்வரும் அளவுகோல்களில் ஏதேனும் ஒன்றைப் பூர்த்தி செய்தால் கண்டிப்பாக பான் கார்டு ( PAN) பெற வேண்டும். வரி விதிக்கக்கூடிய பரிவர்த்தனைகளில் ஈடுபடுபவர்கள், அல்லது வரி வருமானத்தை தாக்கல் செய்ய வேண்டியவர்கள் அல்லது அதிக மதிப்புள்ள நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்பவர்கள் பான் கார்டு வாங்க வேண்டும். எந்தவொரு வரி ஆண்டிலும் ₹5 லட்சத்தைத் தாண்டிய அல்லது தாண்டக்கூடிய மொத்த விற்பனை, விற்று முதல் அல்லது மொத்த ரசீதுகளைக் கொண்ட வணிகம் அல்லது தொழிலில் அவர்கள் ஈடுபட்டுள்ளவர்கள் பான் கார்டு பெற வேண்டும். ஒரு குறிப்பிட்ட வரி ஆண்டிற்கான பிரிவு 263 இன் கீழ் வருமான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும். அதேபோல் ஒரு வரி ஆண்டில் ₹2.5 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட நிதி பரிவர்த்தனையில் ஈடுபடுவோர் பான் பெற வேண்டும். ஒரு தனிநபர் ஏற்கனவே ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கவோ, வாங்கவோ அல்லது சொந்தமாக வைத்திருக்கவோ அனுமதி கிடையாது.