EMIS இணையதள தரவுகள் திருடுபோவதாக சர்ச்சை
கல்வித்துறை தரவுகள் அடங்கிய கல்வியியல் மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) இணையதள விவரங்கள் திருடப்பட்டு தனியார் யு டியூப் சேனல்களில் வெளியாவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
அனைத்து பள்ளி, மாணவர், ஆசிரியர், அலுவலர் மற்றும் நலத்திட்ட உதவிகள் விவரங்கள் என மூன்று ஆண்டுகளில் கோடிக்கணக்கான தரவுகள் இதில் பதிவேற்றப்பட்டுள்ளன.
தலைமையாசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: குறிப்பாக ஆசிரியர்களின் CPS, பணிப் பதிவேடு (eSR), வங்கி, பான் கணக்குகள் உள்ளிட்ட அனைத்து தகவலும் எமிஸில் உள்ளன.எமிஸ் குழுக்களில் பணியில் உள்ள சிலர் தனியாக யுடியூப் சேனல் நடத்துகின்றனர். அதில் எமிஸில் பதிவேற்றம் செய்யும் முறையை வெளியிட்டு ஆசிரியர்களின் ஆயிரக்கணக்கான 'சப்ஸ்கிரைப்ஸ்' 'ஷேர்'கள், 'லைக்'குகள் பெற்று பெரும் தொகை சம்பாதிக்கின்றனர்.
கமிஷன் அடிப்படையில் கல்லுாரிகள், கோச்சிங் சென்டர்களுக்கு மாணவர் விவரங்கள் விற்பனை செய்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். எமிஸ் தகவல்களின் பாதுகாப்பை பன்மடங்கு பலப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது