6 முதல் 10 வரை கணினி அறிவியல் பாடத்திற்கு தனி பாடவேளை அரசுக்கு கோரிக்கை
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்துக்கு தனி புத்தகம், தனி பாட வேளை ஒதுக்க வேண்டும். வேலைக்காக காத்திருக்கும் 60 ஆயிரம் பிஎட் பட்டதாரிகளுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிக - ளில் சமச்சீர் கல்வி மூலம் 2010-2011ம் கல்வியாண்டில் அப்போதைய முதல்வர் டாக்டர் கலைஞர் கணினி அறிவியல் பாடத்தை 6வது படமாக கொண்டு வந்தார். ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இதற்காக தயாரிக்கப்பட்ட பல லட்சம் பாட புத்தகங்கள் குப்பை கழிவுகளாக மாற்றப்பட்டன.
கானல் நீரான பாடவேளை
அதன்பின் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் கானல் நீராய் மாறிவிட்டது. இந்த நிலையில் கடந்த தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கலைஞர் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் நடை முறைப்படுத்தப்படும் என தி.மு.க. தலைமை அறிவித்தது. இதனால் அரசு பள்ளிகளில் கணினி பாடம் தனி பாட மாக கொண்டு வரப்படும் என்ற நம்பிக்கை கணினி ஆசிரியர்கள் மத்தியில் நம்பிக்கை எழுந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பின் பின்னர் தி.மு.க. அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆய்வகம் இருக்கிறது ஆசிரியர் இல்லை
இதற்கிடையே நாடு முழுவதும் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் சமக்ரா சிக்சா திட்டத்தின் கீழ் நவீன கணினி ஆய்வகங்கள் அமைக்கவும், அதற்கு பயிற்றுநர்களை நியமிக்கவும் மத்திய அரசு நிதி வழங்குகிறது. ஒரு ஆய்வகம் அமைக்க ரூ.6.40 லட்சம், பயிற்றுநர் நியமனத்துக்கு ரூ.1.80 லட்சம் வழங்கப் படுகிறது.
இதன்படி தமிழ்நாட் டில் மேல்நிலை பள்ளிகளில் 20 கணினிகள், உயர்நிலை பள்ளிகளில் 10 கணினிகள் என்ற அடிப்படையில் கணினி ஆய்வகம் அமைக்கப் பட்டுள்ளது. மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளி களில் ஆய்வகம் அமைத்த பின்னரும் கணினி பயிற்றுநர்கள் நியமிக்கப் படவில்லை.
ஆனால் நடுநிலை பள்ளிகளில் தற்போது தான் ஆய்வகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆய்வகம் அமைக்கும் முன்பே நடுநிலை பள்ளிகளில் கணினி பயிற்றுநர்கள் தனியார் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 சதவீதம் பேர் கூட முறையான கணினி கல்வி தகுதி பெறாதவர்கள். கணினி பயிற்றுநர்கள் என நியமிக்கப்பட்டுள்ள இவர்கள் பள்ளிகளில் எமிஸ் பணிக் காக பயன்படுத்தப்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலைப் பள்ளிகளில் மொத் தம் 14,663 கம்ப்யூட்டர் பயிற்றுநர் பணியிடங்கள் உள்ளன. சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணினி அறிவியல் பாடத்தில் பி.எட் பட்டம் பெற்றவர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இவர்களுக்கு பணி நியமனம் வழங்காமல் முறையான கல்வி தகுதி இல்லாதவர்களை கணினி பயிற்றுநர்கள் என நியமனம் செய்து அவர்கள் அலுவலக பணிக்கு பயன்படுத்தப்படுகின்றனர். இதன் மூலம் ஆசிரியர்களுக்காக வந்த நிதி அலுவலக பணிக்கு மடைமாற்றம் செய்யப்படுகிறது.
கேரள போன்ற மாநிலங்களில் உயர்தர கம்ப்யூட்டர் ஆய்வகம் அமைத்து, கணினி அறிவியல் பாட புத்தகமும் தனியாக வழங்கி, தனி பாடவேளையும் ஒதுக்கி முறையாக கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கணினி அறிவியல் பாடம் அறிவியல் பாடத்துடன் இணைப் பாக பயன்படுத்துகிறது.
இதனால் மாணவர்களால் கணினிஅறிவியியல் பாடத்தை முழுமையாக கற்றுகொள்ள முடியாத நிலை உள்ளது. அதோடு, கணினி அறிவியல் படித்த பட்டதாரிகளின் நிலையும் கேள்விக்குறியாகியுள்ளது.
இதற்காக வழங்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தி கணினி அறிவியல் படித்த பட்டதாரிகளுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். ஏற்கனவே தமிழக முதல்வராக இருந்த டாக்டர் கலைஞர் செயல்படுத்திய இந்த திட்டத்தை மீண் டும் தற்போதைய தி.மு .க. அரசு செயல்படுத்த வேண்டும். என கணினி அறிவியல் பட்டதாரி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இதுதொடர்பாக தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்க பொது செயலாளர் குமரேசன் கூறி யதாவது:- சமக்ரா சிக்சா திட்டத்தின் கீழ் மத்திய அரசு தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களுக் கும் கணினி அறிவியல் ஆய்வகம் அமைக்கவும். கணினி பயிற்றுநர்கள் நியமிக்கவும் நிதி வழங்குகிறது. தமிழ்நாட்டில் இந்த நிதி வேறு பணிக்கு பயன்படுத்தப்படுகிறது. இங்கு கணினி அறிவியல் கற்பிக்க தனி பாட வேளையும், பாட புத்தகமும் இல்லை. இதனால் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
இது அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்கள் மற்றும் ஏற்கனவே பட்டம் பெற்ற பட்டதாரிகளின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி உள்ளது. அரசு கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்துக்கு தனி பாடபுத்தகம் தயாரிக்க வேண்டும். மற்ற பாடங்களை போல் கணினி அறிவியல் பாடத்துக்கும் தனி பாடவேளை ஒதுக்க வேண்டும். இதில் பிஎட் பட்டம் பெற்றவர்களை பயிற்றுநர்களாக நிய மிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்
நன்றி தினமலர்