10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க தேதி அறிவிக்கப்பட்டுள்ளது - விண்ணப்பிப்பது எப்படி?
10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் வரும் 27-12-2023 ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில், 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் வரும் 27 ஆம் தேதி முதல் ஜனவரி 10ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
மாவட்ட தேர்வுகள் இயக்கக சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.